எழுத்தாளர் சுஜாதா போன்றவர்கள் அடிக்கடி வலியுறுத்துவது தமிழை வளர்க்க வேண்டும் என்பது(நிறைய பேர் பேசினாலும் சுஜாதாவை இழுப்பதற்கு காரணம் உள்ளது)
இதோ Google-இன் படைப்பாற்றலுக்கு மற்றுமொரு உதாரணம் - இந்த வலைப்பதிவு(Blog) அழகிய தமிழில் எழுத உதவிய
http://www.google.com/transliterate/indic/tamilமுதலில் நானும் பல முறை மின் அரட்டை அடிக்கும் போது ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை எழுதுவது உண்டு , இருப்பினும் இப்படி ஒன்று தேவை என்று தோன்றவே இல்லை. இதன் மூலம் வழக்கம் போல் ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுத இது அழகாக தமிழில் வடிவாக்கம் செய்து விடுகிறது.
இதன் சிறப்பே சூழல் பொறுத்து(context based) எழுத்துக்களை தேர்வு செய்து கொள்கிறது. எனவே, tamil என்று அடித்தாலும் சிறப்பு 'ழ' கரம் போட்டு கொள்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துக்கள் வரும்படி வாய்ப்பிருந்தால்(ஒலி/ஒளி/ஒழி) intellisense மூலம் அனைத்து வார்த்தைகளையும் பட்டியல் காட்டி நம்மை தேர்வு செய்து கொள்ள சொல்கிறது
மேலும் பேச்சு தமிழில் இருக்கும் "பரவாயில்ல" போன்ற வார்த்தைகள் கூட வருவது மிகச்சிறப்பு. (இது வெறும் மொழி அன்றி ஒலி பெயர்ப்பு தானா என்று கண்டுபிடிக்க முடியவில்லை) இருப்பினும் தமிழ், தமில் இரண்டு மொழி வார்த்தைகளையும் சேகரித்து உருவாக்கி இருப்பது நல்ல முயற்சி. இதன் மூலம் சற்று துரு பிடித்து இருக்கும் எனது தமிழ் எழுத்தரிவோடு கூட எழுத்து பிழை இன்றி என்னால் எழுத முடிகிறது.
மேலும் அடுத்த கட்டமாக Google மொழி பெயர்ப்பு முயற்சியிலும் இறங்கி இருக்கிறது. அதாவது பிற மொழிகளில் உள்ள வலை தளங்களை தமிழில் மொழி பெயர்த்து கொடுக்கும் - இனி 'The Hindu' செய்திகளை தமிழில் படிக்கலாம். இது எவ்வளவு தூரம் நடை முறை சாத்தியம் என்று தெரிய வில்லை எனினும் இது நடந்தால் அது பெரிய புரட்சி ஆக இருக்கலாம். 'code' போட்டால் Google ரோடு போடுகிறது.
Google தொழில்நுட்பத்தை கொண்டு வந்தாலும் அவர்களுக்கு மொழி திறன் அவ்வளவு எளிதாக கிடைக்க வாய்ப்பில்லை... எனவே தமிழ் பற்றுடைய தமிழர்களின் முயற்சி இன்றி இது நடந்து இருக்க வாய்ப்பு இல்லை. தொழில்நுட்பத்தை தமிழ் வளர்ச்சி(??)காக பயன் படுத்தி இருப்பது சுஜாதா போன்றவர்களின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும்.
வாழ்க தமிழ்! வளர்க தொழில் நுட்பம்!!
(பி. கு) நான் தமிழ் என்று குறிப்பிட்டுள்ள அனைத்தும் பல பிற மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளது.