ஆனால் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" ஓரிரு கதைகளை படித்துள்ளேன். அது இறந்த கால ஸ்ரீரங்கம் , பிராமன பேச்சு, வாழ்க்கை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு வித Nostalgia வை கிளறிவிடுகிறது. எனது சொந்த ஊருக்கு பக்கம் என்பதால் இன்னும் சுவாரஸ்யம் கூடுகிறது. கதைகளிலும் சுஜாதாவின் அதே அவசரம் இருக்கறது. இருப்பினும் அது கதையை விறுவிறுப்பாக்கி விடுகிறது. கதையில் அவர் வேகத்துக்கு ஈடு குடுத்து புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், கதையை கற்பனை செய்து கொள்ள முடிகிறது. மேலும் அந்த வேகத்தில் செல்லும் பொது, சிறு திருப்பங்களும் பெரிய சுவாரிசயமாக அமைந்து விடுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, கோயில் புளியோதரைக்கு இருக்கும் தனி சுவை போல கதைகள் எங்கும் அள்ளி தெளித்த பிராமன வாசம் வீசுவது - உங்களுக்கு கோயில் புளியோதரை பிடிக்கும் என்றால் ஸ்ரீரங்கத்து தேவதைகளும் பிடிக்கும்.
சமீபத்தில் "ஸ்ரீரங்கத்து கதைகள்" என்று ஒரு தொகுப்பு சிக்கியது (விகடனின் பதிப்பு அல்ல ) - அதை படிக்க ஆரம்பித்த பொழுது தான் சுஜாதாவின் விசிறி ஆகலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறேன். "வி.ஜி.ஆர்" என்று ஒரு கதை. ஓய்வுபெற்ற கணக்கு வாத்தியாரின் கடைசி கால நிகழ்வுகள் - வெறும் நரை கூடி கிழ பருவமெய்தி இன்னல் பட்டு இறக்கும் கதைக்குள் ஒரு மெல்லிய ஹாஸ்யம்:
கண் பார்வை சற்று மந்தம், காது ரொம்ப டப்பாசு. ஏதாவது நிழலாடிற்று என்றால் "யார்ராது ?" என்பார்.முழு புத்தகத்தையும் பிறகு ஸ்ரீரங்கத்து தேவதைகளையும் தேடி படிக்க ஆவல். ஆனால் .NET புத்தகங்களுக்கு முதலுரிமை குடுக்கும் கட்டாயம்.
"வேம்பு மாமா".
"யாரு?"
"வேம்பு மாமா." இது உரக்க.
"எச்சுமி புள்ளையா?"
"ஆமாம் மாமா."
"உங்கப்பா சவுக்கியமா இருக்கனா ?"
"அப்பா போன கார்த்திகை மாசம் பரமபதிசுட்டார் மாமா."
"ஏதோ சவுக்கியமா இருந்தா சரி. உங்கப்பா இருக்கானே கணக்கில் ரொம்ப மக்கு. போய்ச் சொல்லு அவன்கிட்ட வி.ஜி.ஆர். சொன்னார்னு. ஆஸ்தியரம் ஒண்டி தான் தெரியும், ஆல்ஜிப்ரான்னா பேதி போறது. ரேயல்வேலதானே பொன்மலைலதானே எட்கிளார்க்கா இருக்கான்?"
"அப்பா போய்ட்டார் மாமா போன கார்த்திக்கு. வருஷாப்திகம் கூட வர போறது. "
"ஏதோ நல்லபடியா இருந்தா சரி. விசாரிச்சதா சொல்லு. என்ன? "
"செவிட்டு எழவே. நீயே போய் விசாரிசுக்கயேன் " என்று வேம்பு முனுமுனுத்துகொன்டே விலகுவான்.
2 comments:
a very good post.keep it up..do keep writing more..we'll plan to create one for our family..what is dad's blog?
good one da nanba.. keep writing.. atleast once a month..
Post a Comment